Sunday, December 16, 2012

பயங்கரவாத தடை சட்ட திருத்தத்தை எம்.பிக்கள் நிராகரிக்க வேண்டும்; மனித உரிமைக் கண்காணிப்பகம் கோரிக்கை

Untitled-1இந்தியாவில் நடைமுறையில் உள்ளசட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தில் மேற்கொள்ள  உத்தேசிக்கப்பட்ட திருத்தங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என்று மனித  உரிமைகள் அமைப்பான மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரானசட்டமாகப் பயன்படுத்தப்படும் மேற்படிசட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர நாடாளுமன்ற மக்களவை கடந்த 30 ஆம் திகதியே ஒப்புதல் அளித்துள்ளது.
தீவிரவாத அமைப்பு ஒன்றைத் தடை செய்யும் காலப் பகுதியை இரண்டு ஆண்டுகளில் இருந்து 5  ஆண்டுகளாக அதிகரிக்கவும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் என்ற வரையறையை  விரிவாக்கவும் குறித்தசட்டத் திருத்தம் வழிகோலியுள்ளது.
மேற்படிசட்டத் திருத்தம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தின் மேலவையில் வாக்கெடுப்பு  நடக்வுள்ள நிலையில் குறித்த அமைப்பின்  கோரிக்கை வெளிவந்துள்ளது.
இதுகுறித்து மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான இயக்குநர்  மீனாக்ஷி கங்குலி தெரிவித்ததாவது:
இந்தியாவில் தடா, பொடா போன்ற பல பயங் கரவாதத் தடுப்புச்சட்டங்கள் இருந்தன. அவை  தற்போது இல்லை என்றாலும், 2008 ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட பல தொடர்  தாக்குதல்களுக்குப் பின்னர்சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புசட்டத்தில் சில மாற்றங்கள்  செய்யப்பட்டன.
தற்போது மேலும் சில மாற்றங்கள் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில்  இதுபோன்றசட்டங்கள் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர் இதுபோன்ற  கடுமையானசட்டங்களால் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.  நிரபராதிகள் கூட பல காலம் சிறையில்  இருக்கநேர்கிறது.
இதுபோன்றசட்டங்கள் அரசை விமர்சிப்போரை மௌனிக்கச் செய்யும் ஆயுதமாகவும்  பயன்படுத்தப்படவாய்ப்புள்ளது. அதேபோல பயங்கரவாத அமைப்புக்களில் நேரடியாக உறுப்பினர்களாக இல்லாதவர்களைக் கூட புதிய திருத்தங்கள் காரணமாகக் கைது செய்யும் வாய்ப்புள்ளது. தீவிரவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இதுபோன்றசட்டங்களால் தீவிரவாதத்தைத் தடுக்க முடியாது.
தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றவுடனேயே பொலிஸ்துறை மீதுசம்பந் தப்பட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் பிரயோகிக் கப்படுகிறது. அதன் காரணமாக அவர்கள் கைதுகளை மேற்கொள்கின்றனர்.
உதாரணத்துக்கு, மகாராஷ்டிராவில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்புக்குப் பின் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர், ஆனால் பின்னர் விசாரணையில் அந்தக் குண்டுவெடிப்பை செய்தது இந்துக்கள் என்று தெரிய வந்தது என்றார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தை விட கடுமையானசட்டங்கள் மகாராஷ்டிரா போன்ற
மாநிலங்களில் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment