உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகரில்
வசிக்கும் 35 வயது மிக்க இந்த பெண்ணை ரியல்
எஸ்டேட் புரோக்கர் ஒருவர்
வீடுகளை காட்டுவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்றார்.
அப்போது வழியில் இரண்டு புரோக்கர்கள் ஏறியுள்ளனர். அவர்கள் கொடுத்த
குளிர்பானத்தை குடித்த இப்பெண் சிறிது நேரத்தில் மயங்க 3 பேரும்
கற்பழித்துள்ளனர்.
பின்னர் மயக்க நிலையில் இருந்த பெண்ணை வழியிலேயே இறக்கி விட்டு சென்றனர்.
மயக்கம் தெளிந்த பின்பே, தான் கற்பழிக்கப்பட்டது தெரிய வர காஜியாபாத்
பொலிஸில் அந்தப் பெண் புகார் கொடுத்தார். இதையடுத்து ரியல் எஸ்டேட்
புரோக்கர்கள் புபேந்தர், ரவி ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் தப்பியோடிய மூன்றாவது நபருக்கு பொலிஸார் வலை
வீசியுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சோதனைகள்
நடத்தப்பட்டு வருகின்றன.
source: [ வியாழக்கிழமை, 04 ஒக்ரோபர் 2012, 11:58.01 AM GMT +05:30 ] |
No comments:
Post a Comment