மத்திய சீனாவில் லியோயங் நகரை சேர்ந்தவர் லீ ஹயோ (34). இவர் முன்னாள் தீயணைப்பு படை வீரர். திருமணமான இவருக்கு மனைவியும் மகனும் உள்ளனர்.
இவர் தனக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தின் அடியில் 4 மீட்டர் ஆழத்தில் ஒரு பாதாள அறை கட்டினார். அழகிய பெண்களை கடத்தி வந்து அதில் அடைத்து வைத்தார்.
இது போன்று 6 பெண்களை கடத்தி வந்து அடைத்து வைத்த இவர் இரவு நேரங்களில் அவர்களை கற்பழித்தார். மேலும், அவர்களை விபசாரத்திலும் ஈடுபடுத்தினார். தனது கட்டளைக்கு அடிபணியாத பெண்களை கொலை செய்து அவர்களின் பிணத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டார்.
இதற்கிடையில் பாதாள அறையில் அடைத்து வைத்திருந்த ஒரு பெண் அங்கிருந்து தப்பி வெளியே வந்து இது குறித்து போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து லீ ஹயோவை போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவர்கள் பாதாள அறையில் அடைத்து வைத்திருந்த 6 பெண்களையும் மீட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல ஆண்டுகளாக இந்த கொடுமையை அனுபவித்து வந்ததாக தெரிவித்தனர். லீ கொடுத்ததவலின் பேரில், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல் டங்ஷியாங் என்ற இடத்தில் இருந்து தோண்டி மீட்கப்பட்டது. அச்சம்பவம் லியோயங் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படத்தி உள்ளது.
No comments:
Post a Comment