இத்தாலி தலைநகர் ரோமைத் தளமாகக் கொண்டு இயங்கும் “நிரந்தர மக்கள் சபை’
இலங்கைப் போரில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள், உலக நாடுகளின் பங்களிப்புகள்,
சமாதானப் பேச்சுக்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கான காரணம் என்பன குறித்து
தனது இரண்டாவது விசாரணையை ஆரம்பித்துள்ளது. உலகின் புகழ்வாய்ந்த யூரர்
குழுவினரும், சர்வதேச மனித உரிமைகள் குழுவினரும் இன்னும் சில தன்னார்வத்
தொண்டு அமைப்புகளும் இணைந்து இந்த விசாரணையை நேற்று முன்தினம் சனிக்கிழமை
ஆரம்பித்துள்ளன. குறித்த சபையின் இலங்கை மீதான விசாரணைகளின் முதல் அமர்வு
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றிருந்தது. இதன் இரண்டாவது அமர்வே
தற்போது நடைபெற்று வருகிறது.