உத்தரபிரதேசத்தில் காவல்நிலையத்தில் மது அருந்தியபடியே காவல்துறையினர்
ஹோலி பண்டிகையை கொண்டாடியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அம்மாநிலத்தின்
மொராதாபாத்தில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சாதாரண உடையில் இருந்த
காவல்துறையினர், காவல்நிலையத்தில் மது அருந்தியபடியே கொண்டாட்டத்தில்
ஈடுபட்டனர்.
அதை சரி செய்வதற்கு ஒரு காவலர் கூட பணியில் இல்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நீதியை நிலைநாட்ட வேண்டிய காவலர்கள், மதுபோதையில் மிதந்ததைப் பார்த்த மொராதாபாத் மக்கள் முகம்சுளித்தபடியே சென்றனர்.
இளம் வயதில் உத்தரபிரதேசத்தின் முதலமைச்சரான அகிலேஷ் யாதவின் ஆட்சியில், அதிகாரிகள் ஒழுக்கமாக நடந்துகொள்ளவில்லை என அவரது தந்தை முலாயம்சிங் அண்மையில் குற்றம்சாட்டினார். இந்த சூழலில், மதுபோதையில் காவலர்கள் ஹோலி பண்டிகையைக் கொண்டாடியிருப்பது அகிலேஷ் யாதவ் அரசுக்கு புதிய பிரச்னையாக கருதப்படுகிறது.
பதிவு செய்த நாள் -
மார்ச் 29, 2013 at 2:46:58 PM
source:Puthiyatalaimurai
No comments:
Post a Comment