Friday, March 29, 2013

மதுபோதையில் காவலர்கள் கொண்டாட்டம்: காவல்நிலையத்தில் மதுவிருந்து


உத்தரபிரதேசத்தில் காவல்நிலையத்தில் மது அருந்தியபடியே காவல்துறையினர் ஹோலி பண்டிகையை கொண்டாடியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அம்மாநிலத்தின் மொராதாபாத்தில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சாதாரண உடையில் இருந்த காவல்துறையினர், காவல்நிலையத்தில் மது அருந்தியபடியே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் மது பாட்டில்களை வைத்தபடி நடனமாடிய காவலர்கள், ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவினர். காவல்நிலையத்தில் தொடங்கிய இந்த கொண்டாட்டம், தெருவுக்கும் வந்தது. மேலும் தள்ளாத போதையில் காவலர்கள் கீழே விழுவதும், எழுவதுமாய் இருந்தனர். போதையால் தடுமாறிய சிலர் எழ முடியாமல் தரையில் கிடந்தனர். தெருவில் இறங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காவலர்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.