Wednesday, June 6, 2012

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதி மீது சித்திரவதை!

பிரித்தானியாவிலிருந்து கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதி ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை ஆதாரங்களுடன் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய அரசால் ஏனைய பல அரசியல் கைதிகளுடன் இலங்கைக்கு அனுப்பபட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரான இவருடன் மேலும் பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பின் பல மாதப் பயணத்தின் முடிவில் மீண்டும் பிரித்தானியாவிற்கு திரும்பிச் சென்றுள்ள குறித்த நபர் தன்னை ஹரி என்ற பெயரில் அடையாளப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் காணப்படும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு பயந்து அகதி அந்தஸ்து கோரிய ஈழத் தமிழர்களை மட்டும் பிரித்தானியா கட்டாயமாகத் திருப்பி அனுப்புகிறது.

கடந்த வாரமும் பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட 36 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment