மது
நாட்டில் அரசியல் மற்றும் அகதிகள் அந்தஸ்த்துக்கோரி அது நிராகரிக்கப்பட்ட
நிலையில் உள்ள தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானியா முயற்சிகளை
மேற்கொண்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. வரும் 28ம் திகதி சுமார் 150
தமிழர்களை தனி விமானம் ஒன்றில் ஏற்றி அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த
பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கைக்குச் செல்லும் வெளிநாட்டு குடிஉரிமையுள்ளவர்களையே இலங்கை அரசு
கைதுசெய்து சிறையில் அடைத்துவரும் நிலையில் இவ்வாறு பிரித்தானியாவில்
இருந்து திருப்பி அனுப்பப்படும் 150 பேரின் நிலை என்னவாக அமையும் என பல
அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ் சட்ட அறிஞர் சங்கம்(UK) மேலதிக நடவடிக்கைகளை
எடுக்கவிருப்பதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது. இவர்கள் பிரித்தானிய
குடிவரவின் நிலைப்பாட்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கிறார்.
எனவே உங்கள் உறவினர்கள் யாரவது தற்போது
குடிவரவுச் சிறையில் இருந்தால்
அல்லது திருப்பி அனுப்பப்படும் சிறையில் இருந்தால் அதனை அறிந்துகொள்ள
மற்றும் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கீழ் காணும்
சட்டவல்லுனர்களோடு தொடர்புகொள்ளலாம்.
President
No comments:
Post a Comment