[ வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011, 06:21.46 AM GMT ]
யாழ்ப்பாணம் தீவகப்பகுதியிலுள்ள ஊர்காவற்துறையில் இராணுவக் காவலரணுக்கு அண்மையிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் உருக்குலைந்து சிதைந்த சடலத்தை இன்று வியாழக்கிழமை காலை அப்பகுதி இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
சடலம் துர்நாற்றம் வீசியதினால் அப்பகுதி மக்கள் இராணுவத்தினருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையியே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதூக யாழ்.ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதி ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்காக யாழ்.ஊர்காவற்துறை அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சடலத்தில் வெட்டுக்காயங்களும் காணப்படுவதாக யாழ்.ஊர்காவற்துறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment