Wednesday, January 5, 2011

ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கைக்கு விரைவில் செல்லும் சாத்தியம்– பேச்சாளர் மார்டின் நெசர்கி


[ புதன்கிழமை, 05 சனவரி 2011, 09:46.30 AM GMT +05:30 ]
ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர்கள் குழு, தமது இலக்குகள் குறித்து அறிந்திருப்பதாக சபையின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி தெரிவித்துள்ளார். 
நிபுணர்கள் குழு, இலங்கைக்கான விஜயத்தை விரைவில் மேற்கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஏற்கனவே அவர்களில் இலங்கை விஜயம் திட்டமிடப்பட்டிருந்த போது, கட்டுப்பாட்டுடனான வீசா வழங்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, விஜயம் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டது.
இது தொடர்பில் இன்னர் சிற்றி பிரஷ் கடந்த நாட்களில் பல கேள்விகளை எழுப்பிய போதும், பதில்கள் எவையும் ஐக்கிய நாடுகள் தரப்பில் வழங்கப்படவில்லை இந்த நிலையில் சபையின் பேச்சாளரிடம் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் இது தொடர்பில் வினவப்பட்ட போது, அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையில் குறித்த நிபுணர்கள் குழு யார் யாரை சந்திக்கும், எந்த மட்டத்தில் இயங்கும் என்பன குறித்து, தமக்கு ஒன்றும் தெரியாது என அவா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நிபுணர்கள் குழு, நல்லிணக்க ஆணைக்குழுவை மாத்திரம்தான் சந்திக்குமா? அல்லது மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? என்பது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என இன்னர் சிற்றி பிரஸ் கோரியுள்ளது

No comments:

Post a Comment