Thursday, December 30, 2010

சிங்கள் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருந்த மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.

இவ்வாறு வெளிக்கொண்டுவரப் பட்ட புகைப்படங்கள் மூலம் தமது உறவுகளை இனம் கண்டு அடையாளம் காட்டிவருகின்றனர். அந்தவகையில் இந்த புகைபடத்தில் இருப்பவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் சிவில் கட்டமைப்பில் பணியாற்றியவர்கள் என உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.news


கடந்த ஆண்டு மே 16  இற்கு பின்னர் சிங்கள இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு இன்று அவர்களது நிலை என்னவென்று தெரியாது இருக்கின்ற நிலையில் போராளிகள் பொதுமக்கள் என அனைவரையும் ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவத்தினர் சுட்டுக் கொன்றிருந்தனர். அவைதொடர்பான பல புகைப்படங்கள் பல்வேறு தரப்புகளால் வெளிக்கொண்டுவரப் பட்டிருந்தது.



1 - தமிழ் ஈழ விடுதலைப் புலிகளது உணவுப் பகுதியில் பணியாற்றியுள்ளார்.

2 - கடல் புலிகளின் வாகனம் திருத்தும் பகுதியில் (கராச்) பணியாற்றிய மாதவன் என்ற இயக்க பெயரை கொண்டவர்.
இவர்களது இந்த விவரம் மாத்திரம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இந்த தகவல்களை கொண்டு மேலதிக தகவல்களை பெறமுடியுமாயின் எமக்கு தெரியப்படுத்தவும்.

3 - இவர் ஏற்கனவே அடையாளப் படுதபட்டவர். மல்லாவி, யோகபுரம் 02 ம் யுனிற்றை சேர்ந்த சந்திரமோகன் - வினோதன் (இயக்க பெயர்- இமையவன் .வயது 20 ) என்பவராவார். 2007 / 03ம் மாத மளவில் இயக்கத்தில் இணைந்து கொண்ட இவர் கிளிநொச்சி மருத்துவ மனை,,புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஆகிய வைத்தியசாலைகளில் மருத்துவ போராளியாக காயமடைந்து வரும் பொது மக்களுக்கான பணியினை மேற்கொண்டிருந்தார்.

போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் மாத்தளன் மற்றும்,,முள்ளிவாய்க்கால் பகுதி தற்காலிக வைத்தியசாலைகளில் தனது கடமைகளை மேற்கொண்டிருந்த வேளை காயமடைந்த பொது மக்கள்,போராளிகளுடன் இராணுவத்தால் 2009 / 05 /18 கைது செய்யபட்டுள்ளார்..

மேலும் இவரது சகோதரனான சந்திரமோகன் -விருந்தன் வயது 18 என்பவரும் படுகாயமடைந்த நிலையில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போய்யுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment